புதுடெல்லி, நவ.5: பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, இரு வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வந்தது. தற்போது அங்கு அதிக அளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் வெளிப்புற படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக சில காட்சிகள் ஸ்டுடியோ செட்டில் எடுக்கப்பட்டு வருகிறது.