ஏசி வாகனத்தில் இருந்து 41 அகதிகள் மீட்பு

உலகம்

ஏதென்ஸ், நவ.5: கிரீஸ் நாட்டில் குளிரூட்டப்பட்ட வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 41 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைவதற்காக வரும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அந்த நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. இவற்றை மீறி சட்டத்துக்கு புறம்பான வகையில் கன்டெய்னர்கள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்குள் அகதிகள் மறைத்து வைக்கப்பட்டு ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு கடத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் கிரீஸ் நாட்டில் இதே போன்ற குளிரூட்டப்பட்ட வாகனம் ஒன்றில் 41 அகதிகள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வடக்கு கிரீஸ் பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது வாகனம் ஒன்றில் அகதிகள் கொண்டு செல்லப்படுவதை கண்டுபிடித்து மீட்டனர்.