புதுடெல்லி நவ.5: புதுடெல்லியில் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு வெளியே போலீசாரும் அவர்களது குடும்பத்தாரும் திடீர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் மீது வழக்கறிஞர்கள் சிலர் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் கோஷம் இல்லை, கோரிக்கைகள் எதையும் அவர்கள் வைக்கவில்லை. சீருடை அணிந்த போலீசார் தங்கள் கைகளில் கருப்பு பேட்ஜ்களை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.‘நாங்களும் மனிதர்கள்தான்’ , ‘காவலர்களை காப்பாற்றுங்கள்’ போன்ற பேனர்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே வழக்கறிஞர்களின் செயலை கண்டிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து காவல்துறை அதிகாரிகள் சமூக வலைதளங்களில் தங்கள் கண்டனங்களைபதிவிட்டுள்ளனர்.