‘வி1’ எனக்கு சேலஞ்சுக்கான ரோல்: அருண் காஸ்ட்ரோ

சினிமா

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்கும் பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக எல்.சிந்தன் வெளியிடும் படம் ‘வி 1’. இதில் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாவெல் நவகீதன் இயக்கி உள்ளார். படத்திற்கு கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்ய, ரோனி ரப்ஹெல் இசையமைத்துள்ளார். சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பு மேற்கொள்ள, விஆர்கே ரமேஷ் கலையமைக்கிறார்.

படம் குறித்து நாயகன் அருண் காஸ்ட்ரோ கூறியதாவது:- நான் பிட்ஸ் பிலானி மையத்தில் தொழில்நுட்பம் படித்தேன். சினிமா மீது கொண்ட தீராத மோகத்தால் அமெரிக்கா சென்று நடிப்பு பயிற்சி பெற்றேன். பின்னர் வாய்ப்பு தேடிய போது இயக்குனர் பாவெல் நவகீதன் என்னை ஆடிஷனில் தேர்ந்தெடுத்தார். இந்த படத்தில் பாரன்சிக் அதிகாரியாக நடித்துள்ளேன். எனக்கு இருட்டு என்றாலே பயம், இதனாலேயே அந்த வேலையை விட்டுவிட்டு கல்லூரி பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். அந்த நேரத்தில் ஒரு கொலை நடந்து விடுகிறது. அந்த கொலையில் துப்புதுலக்குவதற்காக மீண்டும் பாரன்சிக் அதிகாரியாக சென்றேன். இருட்டு பயத்தையும் தாண்டி நான் எப்படி அந்த கொலையை துப்புதுலக்கினேன் என்பது சுவாரஸ்யமாக இயக்குனர் சொல்லியிருக்கிறார் என்றார்.