நடிகர் நிதின் சத்யா கடந்தாண்டு ஜெய் நடிப்பில் வெளியான ‘ஜருகண்டி’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது லாக்கப் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். மேலும் வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அருள் கரோலி இசையமைக்கிறார். ஷ்வேத் நிதின் சத்யா’ நிறுவனம் மூலம் நிதின் சத்யா தயாரித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளது.