விரைவில் ‘தி அயர்ன் லேடி’ படம் துவக்கம்: பிரியதர்ஷினி

சினிமா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தி அயர்ன் லேடி என்ற பெயரில் பயோபிக் படத்தை பிரபல பெண் இயக்குனர் ஏ.பிரியதர்ஷினி இயக்க உள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி அயர்ன் லேடி திரைப்படம் தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவின் முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது. உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களை கவனமாக பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனனை ஜெயலலிதாவின் பாத்திரத்திற்கான சரியான நடிகர் ஆக தேர்வு செய்தேன்.

அவரைப்போல முக அமைப்பு முதல் நிகர் இல்லா ஆளுமை திறன் வரை நித்யா மேனன் இயற்கையாகவே ஜெயலலிதாவின் பண்புகளையும் உள்ளடக்கியிருக்கிறார். தமிழ் உள்ளடக்கி ஆறு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் ஜெயலலிதா. சிறு வயது முதலே “பரதநாட்டியம்“ மற்றும் ஆடல் கலை அறிந்தவர் மற்றும் இசையிலும் நேர்த்தியான திறன் கொண்டவர். படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும் அதனை விரைவில் தெரிக்க உள்ளேன்.