பெங்களூர், நவ.6: தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் செலவினங்களை குறைத்து வருவாயை அதிகரிக்கும் வகையில் பத்தாயிரம் பேரை குறைக்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. உயர் பதவிகள் மற்றும் நடுத்தர பதவிகளில் உள்ள ஊழியர்களில் சுமார் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. தகுதி மற்றும் பணித்திறன் அடிப்படையில் இந்த பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் பணியமர்த்துவதற்கான எச் -1 பி விசா மறுப்பு மற்றும் அமெரிக்காவில் உள்ளூர் ஊழியர்களை பணியமர்த்துவதில் அதிக செலவுகள் போன்ற காரணங்களாலும் இன்போசிஸ் இந்த பணி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.