செங்குன்றம், நவ. 6: சோழவரம் கொசஸ்தலை ஆற்றின் அருகேதனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருப்பதாக போலீசுக்கு வந்த தகவலின் படி சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்த விட்டதாக கூறினர். விசாரணையில் அந்த வாலிபர் காரனோடை சண்முகா நகரைச்சேர்ந்த ராஜேஷ் என்கிற குள்ள ராஜேஷ் (வயது 24) என்பதும் இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இவரை முன்விரோதத்தால் யாராவது தாக்கி சாலையில் வீசப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.