சென்னை, நவ.6: சென்னை வடபழனியில் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.84 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். சென்னை வடபழனி தரணிசிங் காலனியில் உள்ள விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், துணை கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் மற்றும் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சூதாட்டத்தில் ஈடுபட்டோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.