கார்த்தி நடிப்பில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் கைதி. மாநகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர்.

தீபாவளிக்கு வெளியான இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. உலகம் முழுவதும் ரசிகர்களின் பேராதரவுடன் 12 நாட்களில் ரூ.80 கோடி வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வாரமும் தொடர்ந்து படம் ஓடினால் ரூ.100 கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.