பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நிவேத்தா தாமஸ், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடங்க உள்ளது. இதனிடையே தர்பார் பட மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. தமிழ் , தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் அந்தந்த மொழியை சேர்ந்த பிரபலங்கள் இதை வெளியிட இருக்கின்றனர். ‘தர்பார்’ வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.