சென்னை, நவ.6: வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின், நிறுவனரும், தலைவருமான எம்.வி.முத்துராமலிங்கத்தின் 73-வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதிதாக கட்டப்பட்ட வேலம்மாள் அரங்கத்தை அவர் திறந்து வைத்தார். நொளம்பூர் பகுதியில் அமைந்துள்ள இந்த வேலம்மாள் அரங்கம் 3 அடுக்கு மாளிகையாகும். இந்த அரங்கத்தில் திருமணங்கள், நிச்சயதாம்பூலங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மாநாடுகள் ஆகியவை நடைபெறும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 1500 பேர் அமரும் வசதி கொண்டதாகும்.

இங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இவைகள் செயல்படும். எல்இடி திரைகளும் உள்ளன. இந்த அரங்கம் மனை எண்.324, முகப்பேர் மேற்கு, நௌம்பூர் மெயின் ரோடு என்ற முகவரியில் உள்ளது.