கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்கேற்ற பேஷன் ஷோ

சென்னை

சென்னை, நவ.6: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நடிகருமான ஸ்ரீசாந்த் சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்துகொண்டு அசத்தினர். பிரவோலன் பேஷன் வீகின் இரண்டாம் நாள் நிகழ்வு, கடந்த 3-ந் தேதி ஐ.டி.சி கிராண்ட் சோலா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம் வந்த வருவாயை, பிரோவாலியன் ஈவென்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பிரபா விவசாயிகளின் நலனுக்காக வழங்கினார்.

இந்த நிகழ்வை பிரபல நடன இயக்குனர் சமீர் கான் தொகுத்து நடத்தினார். பேஷன் நிகழ்வின் இரண்டாம் நாளில் பங்கேற்ற வடிவமைப்பாளர்களில் ரினு அலுங்கல், ரூபா பாட்டீல், சத்கிருத், ஹீனா கவுசர், சவுரவ் மஜும்தர், ரேஷ்மா குன்ஹி மற்றும் ஹரி ஆனந்த் ஆகியோர் அசத்தினர்.சர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களின் உடைகளுக்கு சனம் ஷெட்டி, ஸ்ரீ ரெட்டி, சாக்ஷி அகர்வால், கணேஷ் நிஷா, ஹுமா குரேஷி, சஞ்சிதா ஷெட்டி, ஸ்ரீசாந்த், மிஸ் சவுத் இந்தியா கோமல் ஷர்மா, அனாகா மருத்தாரா மற்றும் ராஜீவ் பிள்ளை உள்ளிட்ட நேர்த்தியான மாடல்களால் உயிருட்டப்பட்டன.