திருச்சி, நவ. 6: திருச்சியில் மட்டும் சுமார் 700 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன. ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய தகவல்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் தெரிவிக்கலாம் என்றும் காற்று மாசுவினால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார். திருச்சி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த இந்த விழிப்புணர்வு முகாமை, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, ஐ.ஜி பாஸ்கரன், மத்திய மண்டல தீயணைப்பு மீட்புத்துறை துணை இயக்குநர் ப்ரியா ரவிச்சந்திரன், தமிழக வருவாய்த்துறை முதன்மைச் செயலர் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். அப்போது அவர் கூறுகையில், காற்று மாசுவினால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.