சென்னை,நவ.7: தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யக் கூடாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சர்வதேச தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதன துறை தொடர்பான சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் சர்வதேச அளவில் உள்ள தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதனம் துறைசார்ந்த நிறுவனங்களின் அதி நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் பயன்பாட்டில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களில் படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் பிரபல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களான எல்காட், டாட்டா, இன்ஃபோசிஸ், இன்டெல், உள்ளிட்ட பல்வேறு தகவல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் படைப்புகளில் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது துவக்க விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்தரங்கை தொடங்கி வைத்த பின் உரையாற்றுகிறார். இவ்விழாவில் தகவல் மற்றும் தொழில் துறை ஆர்.பி.உதயகுமார், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலர் டாக்டர் சந்தோஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு நாள் கருத்தரந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசியதாவது: அந்த நிறுவனத்தின் உரிமையார்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் மத்தியில் முதல்வர் பழனிசாமி பேசினார். அப்போது தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யக் கூடாது. கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தகவல் தொழில் நுட்ப துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது முற்றிலுமாக தடுக்க வேண்டும். அவ்வாறு ஆள்குறைப்பு நடவடிக்கையை எவ்வாறு குறைக்க வேண்டும் என்பது குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்க வேண்டும் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை தகவல் தொழிநுட்பத் துறையில் உருவாக்கியுள்ளோம்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. தமிழகத்தில் முதுலீடு செய்துள்ள மற்றும் முதலீடு செய்ய முன்வரும் தொழில்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அதிகளவில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக உள்ளனதமிழகத்தில் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி முதலீடு கிடைத்துள்ளது.

மாநில தகவல் குடும்ப தொகுப்பு உருவாக்கப்படும். கிராமபுற மக்களுக்கு இணையதள வசதி திட்டம் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு மக்கள் வராமல் மக்களைத் தேடி அரசு செல்லும் கனவு நிறைவேறுகிறது இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் அமைச்சர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்,தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முதல்வர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்க அதிகளவில் முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் 2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல பயன்களை தமிழக மக்களுக்கு அளிக்கும் என நம்புகிறேன் என்றார்.