சென்னை,நவ.7: முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில், நவம்பர் இறுதி வாரத்தில் அல்லது டிசம்பரில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தத்திற்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு மேயர் பதவிக்கு கவுன்சிலர்கள் மூலம் மறைமுகத் தேர்தல் நடத்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டத்திருத்தம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற பழனிசாமி அரசு, கடந்த 2018-ம் ஆண்டு, ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் மீண்டும் மாற்றம் செய்தது. இதனால், தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டிருந்தது.
இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் பல துறைகள் குறித்த கொள்கை ரீதியான பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.