காற்று மாசுக்கு தீர்வு காண்க: திருநாவுக்கரசர்

சென்னை

சென்னை, நவ.7: தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர், திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் விமான நிலைய கலந்தாய்வு செல்லும் முன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், டெல்லியில் நிலவிவரும் கடுமையான காற்றுமாசுவால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். சென்னையிலும் காற்றுமாசு இருக்கிறது. இதற்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என்றார்.