நடிகை பிரியங்காவிற்கு கடம்பூர் ராஜூ பாராட்டு

சினிமா

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் பிரியங்கா நடிப்பில் உருவாகி உள்ள மிக மிக அவசரம் படம் நாளை வெளியாகிறது. லிப்ரா புரொடக்ஷன் சார்பில் உலகமெங்கும் நாளை வெளியிடுகிறது. மிக மிக அவசரம் படம் காவலர்களின் பணியில் நேரும் சிரமங்களை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது.

இப்படத்தைப் பார்த்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார். அவ்வமயம் ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர்.