களத்துர் கண்ணமா படம் மூலம் சினிமா துறையில் தனது 5-வது வயதில் அடியெடுத்து வைத்தவர் கமல்ஹாசன். தற்போது இந்தியன்-2 வரை 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன் சினிமாத்துறையில் அடியெடுத்துவைத்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி 3 நாள் விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்ப்டடுள்ளது. கமல்ஹாசன் பிறந்நாளான இன்று தனது தனது சொந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தையின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். இந்நிலையில், சர்ப்பிரைசாக நடிகர் பரமக்குடியில் சென்று கமல்ஹாசனை நேரில் வாழ்த்தி உள்ளார்.

பின்னர் தந்தை சிலை திறப்பு விழாவிலும் கமலுடன், பிரபுவும் கலந்து கொண்டார். நாளை மற்றும நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் இளையராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலுடன் பணியாற்றிய நடிகை, நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரையுலகினர் பங்கேற்கின்றனர். கமல் தற்போது அரசியல் கட்சி தொடங்கி உள்ளால் அரசியல் கட்சியை சேர்ந்த நண்பர்கள் சிலரும் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.