நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் வலிமை படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. வரும் 2020 ஆம் ஆண்டு பின்பாதியில் இப்படம் வெளியாக இருக்கிறது. இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில், பாசம் வைப்பதில் அஜித்தை மிஞ்ச யாராலும் முடியாது. இதையே தன மகன், மகளுக்கும் அஜித் கற்றுக்கொடுத்துள்ளார்.

அந்த வகையில், அஜித்தின் மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா ஆகிய இருவரும் சேர்ந்து படுத்திருப்பது போன்று செல்ஃபி எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனோஷ்கா கையில், நாய்க்குட்டியையும் வைத்திருக்கிறார்.
அஜித்துக்கு பொதுவாக அப்பா – மகள் பாசம் ரொம்ப பிடிக்கும். ஆனால், ஆத்விக் – அனோஷ்காவிற்கு அக்கா தம்பி பாசம்தான் ரொம்ப பிடிக்கும்போல. இந்த புகைப்படத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. சென்னை டிரெண்டிங்கில் ஆத்விக் அஜித் என்ற ஹேஸ்டேக் முதலிடத்திலும், அனோஷ்கா அஜித் என்ற ஹேஸ்டேக் 3 ஆவது இடத்திலும் டிரெண்டாகி வருகிறது.