தர்பார் போஸ்டரை கமல், மோகன்லால், சல்மான்கான், மகேஷ்பாபு வெளியிடுகின்றனர்

சினிமா

பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நிவேத்தா தாமஸ், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடங்க உள்ளது. இதனிடையே தர்பார் பட மோஷன் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது. தமிழ் பட போஸ்டரை கமல்ஹாசனும், தெலுங்கு பட போஸ்டரும் மகேஷ்பாபுவும் , ஹிந்தி பட போஸ்டரை சல்மான்கானும், மலையாளம் பட போஸ்டரை மோகன்லாலும் வெளியிடுகின்றனர். 4 மொழிகளில் முக்கி யி பிரபலங்கள் வெளியிடுவதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.