சூதாட்டப் புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்கள் கைது

விளையாட்டு

பெங்களூரு, நவ.7: கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக பிரிமீயர் லீக் டி.20 கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் உறுதியானதையடுத்து, பெல்லாரி அணியின் கேப்டன் கவுதம், மற்றொரு வீரர் அப்ரார் காஸி ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். இதே புகாரில், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி வீரர்கள் விஸ்வநாதன், நிஷாந்த், பயிற்சியாளர் விணுபிரசாத் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.