தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு திமுக பதில்

சென்னை

சென்னை, நவ.8: தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டார் என்றும், அரசியலில் இல்லாத ரஜினிக்கு இது தெரியவில்லை என்றும், திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில், தமிழக அரசியலில் ஆளுமை மிக்க தலைமை இல்லாத வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து திமுக பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிம் கூறியதாவது:- தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி வெகு நாட்கள் ஆகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்திருந்தால் இது அவருக்கு தெரிந்திருக்கும், அரசியலில் அவர் இல்லாதால் தெரியவில்லை என்றார். அவர் மேலும் கூறுகையில், ரஜினிக்கு காவிச்சாயம் பூச யார் முயன்றார்கள் என்பது, தெரியிவில்லை. அவர் யாருக்கு பதிலளித்து இதை கூறினார் என்பதும் எங்களுக்கு தெரியாது என்று துரைமுருகன் மேலும் தெரிவித்தார்.