டெஹ்ரான், நவ.8: ஈரானில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் உள்ள அஸ்ப்ஃபோருஷான் என்ற இடத்தின் அருகே சுமார் 10 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 5,9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர்.