புதுடெல்லி, நவ.8: பிஜேபி மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளிட்டோர் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு வருடமும் அத்வானியின் பிறந்தநாள் அன்று அவரது வீட்டுக்கே சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அதே போல் அத்வானியின் 92வது பிறந்தநாளான இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஜேபி செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இதன்பின்னர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், அத்வானி இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.