சென்னை, நவ,8: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் வரலாறு காணாத அளவில் ஒரு சவரன் தங்க விலை ரூ.30 ஆயிரத்தைத் தொட்டது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.144 உயர்ந்த நிலையில் இன்று ரூ.184 குறைந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.184 குறைந்து, ரூ.29,080 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.49.20லிருந்து இன்று ரூ.47.80 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ48,800 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,400 ரூபாய் குறைந்துள்ளது.