வாஷிங்டன், நவ.8: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்தி வரும் ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்’ எனும் அறக் கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக் கட்டளையின் நிதியை டிரம்ப் தனது சொந்த செலவுகளுக்கு பயன் படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இந்த அறக்கட்டளை மூடப்பட்டது. இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவரக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் தனது அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14 கோடி ) அபராதம் விதித்துள்ளது.