சென்னை, நவ 8: ரஜினி காந்த் கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து என்று தமிழக பிஜேபி மாநில பொறுப்பு தலைவர் வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார், ரஜினியை மட்டுமல்ல பலருக்கும் கட்சியில் சேர வருமாறு பிஜேபி அழைப்பு விடுத்திருக்கிறது என்று வானதி சீனிவாசன் கூறினார். அவர் சுதந்திரமானவர், சுதந்திரமான முறையில் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
அவருடைய சில கருத்துக்கள் பிஜேபிக்கு ஆதரவாகவும், சில கருத்துக்கள் எதிராகவும் இருக்கிறது.