பணமதிப்பிழப்பு தாக்குதல் 3-ம் ஆண்டு: ராகுல்

இந்தியா

புதுடெல்லி, நவ.8: நாட்டில் 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் செல்லாது என்று மத்திய அரசு பண மதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதலை நடத்தி 3 ஆண்டுகள் ஆகிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி இருக்கிறார். அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், இந்த நடவடிக்கையால் லட்சக்கணக்கான சிறு தொழில்கள் சிதைந்து போயின என்றும், பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறி இருக்கிறார்.