சென்னை, நவ.8: லிப்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலனியில் அடுக்குமாடி கட்டுமான பணி நடைபெற்றுவருகிறது. இதில், லிப்ட் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில், மூவரசம்பேட்டையை சேர்ந்த நித்யன் (வயது 20) ஈடுபட்டுள்ளார். பணிமுடிந்து, நேற்று மாலை வயர்களை சுற்றிவைத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், நித்யன் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

உடனிருந்தவர்கள் நித்யனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்துவந்த ஆதம்பாக்கம் போலீசார், சடலத்தை மீட்டு குரோம் பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக, கட்டுமான உரிமையாளர் வெள்ளையன், லிப்ட் ஆப்ரேட்டர் நித்யானந்தம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். லிப்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டி ருந்த வாலிபர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.