சென்னை, நவ.8: மண்ணடியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 40). இவர், புதிய பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்கவந்துள்ளார். அப்போது, கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 15 செல்போன்கள் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. இது குறித்து வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்ததில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் இருவர், இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.