அயோத்தி வழக்கில்தீர்ப்பு எதிரொலி காஞ்சிபுரம் கோயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

TOP-6 தமிழ்நாடு முக்கிய செய்தி

காஞ்சிபுரம், நவ. 9: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை யொட்டி காஞ்சிபுரம் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு.மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படுவதை ஒட்டி எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சுற்றுலாத்தலம், கோவில் நகரமான காஞ்சிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில், காமாக்ஷி அம்மன் கோவில் , ஏகாம்பரநாதர் கோவில், ரயில்வே நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கள், 11 டிஎஸ்பிகள், 31இன்ஸ்பெக்டர்கள், உள்ளிட்ட 1,700 போலீசார் மாவட்டம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.