கோபுரத்தில் துவார பாலகர் பொம்மை உடைந்து சேதம்

தமிழ்நாடு

சிதம்பரம், நவ.9: உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் நான்கு முக்கிய கோபுரங்கள் உள்ளது. இதில் நேற்று கிழக்கு கோபுரத்தில் உள்ள துவார பாலகர் பொம்மை வலதுகால் உடைந்து தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.பீ சிதம்பரம் நடராஜர் கோயில் பிரதான வாயிலான கிழக்கு கோபுரத்தின் மூன்றாவது அடுக்கில் இருந்த துவார பாலகர் பொம்மையின் வலதுகால் தீடீரென உடைந்து தொங்கியது.

இதனால் கோயில் பொதுதீட்சிதர்கள் அவ்வழியே பொதுமக்கள் ,பக்தர்கள் செல்ல தடை விதித்து,அதை தொடர்ந்து கோபுரத்தில் மேல் ஏறி கயிறு மூலம் உடைந்து தொங்கிய துவாரபாலகர் பொம்மையின் கால் பகுதியை பாதுகாப்பாக மீட்டெடுத்தனர். பின்னர் கிழக்கு கோபுர வாயில் வழியே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோபுரத்தில் ஏராளமான குரங்குகள் வந்து கோபுர பொம்மைகள் உட்கார்ந்து வருவதால் பொம்மை உடைந்து போய் இருக்கலாம் என கூறப்படுகிறது.