சென்னை, நவ,9: நகரின் இருவேறு இடங்களில் கஞ்சா விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ராமாபுரம் பகுதியில் ராயலாநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த 2 பேரை கைது செய்தனர். அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 37), பாஸ்கர் (வயது 36) என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, ஒன்றேகால் கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

இதேபோல், செங்குன்றம் பகுதியில் நேற்றிரவு கஞ்சா விற்ற வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ் (வயது 29), புழலை சேர்ந்த விஜி (வயது 20) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.