ஹெலிகாப்டர் கண்காணிப்பில் அயோத்தி,பைசாபாத் நகரங்கள்

இந்தியா

அயோத்தி, நவ.9: அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதை தொடர்ந்து உ.பி முழுவதும் இதுவரை இல்லாத பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. அயோத்தி, பைசாபாத் நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இரு நகரங்களும் சீல் வைக்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 12 கம்பெனி துணை ராணுவம் அதிரடிப்படை, தீவிரவாத எதிர்ப்பு படை என ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டன. லக்னோவில் டிஜிட்டல் யுத்த அரைத்திறக்கப்பட்டது. 12 பேர் கொண்ட சமூக வலைதள உறுப்பினர்கள் மற்றும் 3 லட்சம் டிஜிட்டல் தன் ஆர்வளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். உ.பியின் 25 மாநிலங்களிலும், வாட்ஸ்அப், பேஸ்புக் தகவல்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன.

மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஜிட்டல் சிப்பாய்கள் உடனுக்குடன் காவல்துறையிடம் பறிமாறுவார்கள், ஆள் இல்லாத விமானங்கள் அயோத்தியில் பரக்கவிடப் பட்டுள்ளன. 2 ஹெலிக்காப்டர்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார். உத்திரபிரதேசதில் 1800 இடங்கள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டு அங்கு பாதகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராம்பூர், பேரேலி, அம்பேத்கார் நகர், அலகாபாத், மீரட், பைசாபாத் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.