ஆக்ஷன் ஷூட்டிங்கில் உயிர் போய் உயிர் வந்தது: விஷால்

சினிமா

இயக்குனராக நினைப்பவர்கள் , ஈகோ பார்க்காமல் அனைவரும் ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால் ‘ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் வசனகர்த்தா பத்ரி, நடிகர் சாரா, நடிகைகள் தமன்னா சாயாசிங், அகன்ஷாபூரி, ஹிப்ஹாப் ஆதி, இயக்குநர் சுந்தர்.சி. உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் நடிகர் விஷால் பேசும்போது:- சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். ‘சங்க மித்ரா’ தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’ தான். ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன். ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க விடாமல் செய்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள் என்றார்.