விஸ்வாசம் படத்தை வெளியீட்டு வெற்றி கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து தயாரித்துள்ள படம் ஆலம்பனா. முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். மக்களை எண்டெர்டெயின்மெண்ட் பண்ணும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார்.

இதுவரை வந்த வைபவ் படங்களிலே ஆலம்பனா தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. மேலும் வைபவ் கரியரில் இது மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது. படத்தில் முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல வருடங்களுக்குப் பிறகு பட்டிமன்றங்களின் ஹீரோ திண்டுக்கல் ஐ லியோனி இப்படத்தில் நடிக்கிறார்.

மேலும் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதம் தருவது போல காளிவெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். முரளிசர்மா ஒரு கேரக்டரில் நடிக்க, வேதாளம் படத்தில் வில்லனாக மிரட்டிய கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார். படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்க, வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்ய, ஆர்ட் டைரக்டராக கோபி ஆனந்த் பங்கேற்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ஆலம்பனா 2020 சம்மர் கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது.