சென்னை, நவ.11: திருச்சியை சேர்ந்தவர் அடைக்கன் (வயது 40). இவர், சேப்பாக்கம் பெரியதெரு பகுதியில் தங்கி, கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தில் உதவியாளராக பணியாற்றிவருகிறார்.கடந்த 8-ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு நடந்து செல்லும்போது, செல்ல பிள்ளையார் கோயில் தெரு அருகே பைக்கில் வந்த 2 பேர் அடைக்கனின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இது குறித்த புகாரின்பேரில், ஜாம்பஜார் போலீசார் விசாரணை நடத்தி, ராயப்பேட்டையை சேர்நத முகமது ரவூஃப் (வயது 21), ஐஸ் ஹவுஸை சேர்ந்த இம்ரான் பாட்ஷா (வயது 21) ஆகிய 2 பேரை கைது செய்து, அடைக்கனுடைய செல்போன் உட்பட 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.