ஜெருசலேம் பயணம் மேற்கொள்ள நிதி உதவி பெறலாம்

சென்னை

சென்னை, நவ.11: தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் (இவற்றில் 50 கன்னியாஸ்திரிகள் / அருட் சகோதரிகள்) 2019-20-ம் ஆண்டில் ஜெருசலேம் புனிதபயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000/- நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 30-ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப்படிவம் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம்.

தவிர இணையதளம் மூலம் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறித்தவர்கள் 30-க்குள் இயக்குநர், சிறுபான்மையினர் நல இயக்ககம், கலசமஹால், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.