இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு

சென்னை

சென்னை, நவ.11: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் என்னும் புதிய அலுவலகம் கிண்டியில் செயல்பட்டு வருகிறது. இளைஞர்கள் மற்றும் வேலை நாடுபவர்களின் நலனுக்காக ஒரு சிறந்த தளத்தை உருவாக்க வேண்டி கீழ்காணும் சேவைகளை மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் வழங்கி வருகிறது. மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் செயல்பாடுகளில் சில, உள மதிப்பீடு சோதனைகள், தொழில்நெறி ஆலோசகர்களால் வழங்கப்படும் உரிய ஆலோசனைகள், அரசுப்போட்டித் தேடிவிற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்.

இதனில் தகுதியுள்ள மனுதாரர்களுக்கு தகுந்த தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற்று வழங்குதல் வேண்டி பல்வேறு புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற விரும்பும் வேலைநாடும் இளைஞர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் பதிவு செய்யும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது மூலம் அனுப்பி வைக்கப்படும்.