திருவள்ளூர், நவ.11: திருவள்ளூர் மாவட்டத்தில் தோட்டக்கலை சார்பில் 5 ஆயிரம் பனை விதை நடும் விழா கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப் பெரும்பாக்கம் ஊராட்சி யில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுரையின்படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி மேற் பார்வையில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.

இதற்கு பப்பரம்பக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா வரதராஜன் தலைமை தாங்கினார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முகமது ஹக்கீம், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, தோட்டக்கலை துறை அலுவலர்கள் பெரியசாமி, பாலாஜி, பிரபாகரன், செயற்பொறியாளர் யாஸ்மின், உதயசங்கர், ஊராட்சி செயலாளர் அசோக்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பனை விதை நடும் விழாவில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.