சென்னை, நவ.12: போன் செய்தால் போது பைக்கில் உடனடியாக தாங்கள் இடத்திற்கே வந்து ஒரு கும்பல், கஞ்சா சப்ளை செய்துவருவதாக இணை கமிஷனர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், தனிப்படை அமைத்த போலீசார், மப்டியில் கஞ்சா வாங்குவதுபோல் நடித்து அந்த கும்பலுக்கு போன் செய்துள்ளனர். அப்போது, லிண்டன் டோனி (வயது 26) என்பவர் வந்து கஞ்சாவை தந்துள்ளார். உடனடியாக அவரை மடக்கி பிடித்த போலீசார், அவர் அளித்த தகவலின்பேரில், தரமணியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கமலக்கண்ணன் (வயது 28), அரவிந்தன் (வயது 30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், கொடுங்கையூரில் கஞ்சா விற்ற சாந்தி (வயது 47) என்பவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தி 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.