இலங்கை அதிபர் தேர்தலில் கடும் போட்டி

உலகம்

கொழும்பு, நவ.12: வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தப்பய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மைத்திரிபாலா சிவசேனா போட்டியிடவில்லை. மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனா வேட்பாளர் கோத்தப்பய ராஜபக்சேவுக்கும் (வயது 70) ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனாயக கூட்டணி வேட்பாளர் சுஜித் பிரேமதாசாவுக்கும் (வயது 52) கடும் போட்டி ஏற்பட்டது.

கோத்தப்பய ராஜபக்சே முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் சகோதரர் ஆவார். முன்னாள் ராணுவ அமைச்சரான இவர் விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை வழிநடத்தியவர். சுஜித் ராஜபக்சே, முன்னாள் அதிபர் ரனசிங்கை பிரேமதாசாவின் மகன் ஆவார். வீட்டு வசதி துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். இவர் தாம் வெற்றி பெற்றால் புதிய அரசியல் சட்டத்தை கொண்டு வருவேன் என்றும், நீதிமன்றங்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
2009-ல் விடுதலை புலிகளுடனான இறுதியுத்தம் முடிவடைந்த பிறகு இலங்கையில் சீனா பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய தொடங்கியிருக்கிறது. 2018-ம் ஆண்டில் இப்போதைய அதிபர் சிறிசேனாவிற்கும், பிரதமர் ரனில் விக்ரம சிங்கேவிற்கும் கடும் மோதல் ஏற்பட்டது. ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் குண்டுவெடித்ததில் 253 பேர் உயிரிழந்தனர். இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில், புதிய அதிபர் தேர்தல் முடிவு ஆவலுடன் எதிபார்க்கப்படுகிறது.