தனது தனிச்சிறப்பான ‘நட்ராஜ் ஷாட்’டை அருமையாக மறு உருவாக்கம் செய்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் ’83’ என்ற படத்தில், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலக ஜாம்பவனுமான கபில் தேவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்து வருகிறார். படத்தில் தான் விளையாடிய ‘நட்ராஜ் ஷாட்’ புகைப்படத்தை ரன்வீர் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு, பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வந்தனர். இந்த நிலையில், அப்புகைப்படத்தை கபில் தேவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரன்வீர் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.