வேலூர், நவ.13: வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தமாக செயல்பட்ட 50 தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்து கலெக்டர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க ஊராட்சி, நகராட்சி,மாநகராட்சி டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிக்காக 1966 தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் டெங்கு ஒழிப்பு பணிகள் நடைபெறுகிறதாக என்று ஆய்வு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டதில் 50தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் சண்முகநாதன் உத்தரவிட்டுள்ளார்.