சென்னை, நவ.13: வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 34 செல்சியஸ் இருக்கும் என்றும், குறைந்தபட்சமாக 25 செல்சியஸ் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது