புதுடெல்லி, நவ.14: ராகுல் காந்தி பொறுப்புடன் பேச வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ரபேல் போர் விமானங்கள் வாங்கியது குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதை ராகுல் காந்தி தவறாக சித்தரித்து பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் என கூறிவிட்டதாக பேசியிருந்தார். நாட்டின் காவலாளியே திருடனாகி விட்டார் என்று குற்றம்சாட்டினார். ராகுல் பேசியதற்கு எதிராக பிஜேபி எம்பி மீனாட்சி லேகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருந்தார். இருப்பினும் வழக்கை தொடர்ந்து விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, ராகுல் காந்தியின் மன்னிப்பை ஏற்று இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். ராகுல் காந்தி பொறுப்புடனும் பேச வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.