குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினர் பிரேசில் அதிபர்

உலகம்

பிரேசிலியா, நவ.14: இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெற்று வருகிறது. பிரேசில் அதிபருடன் நடந்த சந்திப்பின் போது, இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரேசில் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.