பெங்களுரு, நவ.14: கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களும் இடைத் தேர்தலில் போட்டியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் அவர்கள் இன்று பிஜேபியில் இணைந்தனர். கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரின் உத்தரவு செல்லும், அதேசமயம் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டும், அவர்கள் வெற்றி பெற்றால் அமைச்சர் உட்பட வேறு எந்த அரசு பதவியை வகிக்கவும் தடையில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. பாஜகவை ஆதரித்து வரும் அவர்கள் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இன்று முறைப்படி கர்நாடக முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் அவர்கள் 15 பேரும் இன்று பாஜகவில் இணைந்தனர்.