சென்னை, நவ.14: திருவல்லிகேணி பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, இன்று காலை 6.30 மணியளவில் அவ்வழியாக வந்த கால் டாக்ஸியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 20 பெட்டிகள் வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்டாப்கள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. இது குறித்து காரில் வந்தவர்களிடம் விசாரிக்கையில், துபாயிலிருந்து எடுத்துவந்ததாக கூறியுள்ளனர். ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, முகமது இலியாஸ் (வயது 29), சையது முஜாஹிதீன், கால் டாக்சி டிரைவர் சூர்யா (வயது 23) ஆகிய 3 பேரை பிடித்து திருவல்லிகேணி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.